கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வருபவர் அசோக்குமார்(32). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கோவை- மேட்டுப்பாளையம் சாலை கேஸ் கம்பெனி பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து அளவில் இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியது இந்த விபத்தில் தந்தை மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
மேலும் தாய் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கணவன், மனைவி, குழந்தை, ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேலையில் பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதி குழந்தையும், கணனையும் பறிகொடுத்த நிலையில் அந்த பெண்மணிக்கு ஏற்பட்ட காயங்களை கூட அறியாமல் கதறியது பார்ப்போரை பரபரக்கச் செய்தது.
இச்சம்பவத்தை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் ஒருங்கிணைந்து பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலை கலைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் இது போன்ற விபத்துகள் இது முதன் முறையல்ல.பல உயிர்களை பழிவாங்கிய தனியார் பேருந்துகளுக்கு விதிமுறைகளை விதிக்க வேண்டும் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலை தொடர்ந்தனர். உடனே கூட்டத்தை கலைக்க அதிவிரைப் படை போலீசாரும் வரவழைக்கப் பட்டனர். மேலும் பிரச்சினை அதிகரிக்கவே காவல்துறை இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க பேச்சுவார்த்தை நடத்துவோம் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் தெற்கு பாளையம்,காந்தி நகர்,கேஸ் கம்பெனி பகுதிகளில் விபத்துகளை தடுக்க திங்கட்கிழமை காவல்துறை மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டம் கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.