தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கருங்குளம் ஒன்றியம் சொக்கலிங்கபுரம் மற்றும் நடுக் செக்காரக்குடி மேல செக்காரக்குடி பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடுச்செக்காரக்குடி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 17.65 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக்கடை கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மேலச்செக்காரக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி அய்யாதுரை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.