கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றி கழக கட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வால்பாறை நகரத் தலைவர் ஆண்ட்ரூஸ், நகரத் செயலாளர் செய்யது அலி, நகரத் பொருளாளர் லோகேந்திரன் முன்னிலையில் 8-வது வார்டு சோலையார் டேம் பிரகாஷ் தலைமையில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் இணைந்த அனைவருக்கும் நகரத் தலைவரும் நகரப் பொருளாளரும் சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றனர். இதுகுறித்து வால்பாறை நகரத் தலைவரும், நகரச் செயலாளரும், நகரப் பொருளாளரும் ஒன்றிணைந்து கூறுகையில் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் கட்டளைப்படியும் கோவை மாவட்ட தலைவர் அண்ணன் விக்கி அவர்களின் வழிகாட்டுதல் படியும் 2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கைப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்களை தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம் அதே சமயம் நாள்தோறும் தாமாக முன்வந்து கழகத்தில் மக்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர் இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
-M.சுரேஷ்குமார்.