தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம், நுத்தஞ்சேரி, வார்டு 70, மண்டலம் 5, குளக்கரை தெருவில் அமைந்துள்ள குளம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடம் தேனுபுரீஸ்வரர் கோயில் அருகே உள்ளது.
இந்தக் குளத்தின் வடகிழக்கு பகுதியில் சுமார் 1/2 ஏக்கர் குளம் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தாம்பரம் மாநகராட்சி இந்த குளத்தினை 57 லட்சம் ரூ செலவில் தூர்வாரி, புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் இந்த குளத்தினை வருவாய் அளவையர் உதவியுடன், அத்து அளந்து குளத்தின் முழு பரப்பளவை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி அதன் மேல் நடை பாதை அமைக்க வேண்டும் என்றும் அதைத் தவிர குளத்தின் நீர் பிடிப்பு பகுதியை சுருக்கும் வகையில் வேறு எந்த கட்டுமானமும் அமைக்க கூடாது என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-செந்தில் முருகன் சென்னை.