தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சென்னம்பட்டி கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் சரவெடி சரத்பாலா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மகளிரணி தொண்டர் அமைப்பாளர் இராமலட்சுமி, புதூர் கிழக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மாரீஸ்வரி, திமுக நிர்வாகிகள் இராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஞான குருசாமி, மருதுபாண்டியன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.