திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாநில அளவிலான சேம்பியன்ஷிப் யோகாசன போட்டிகள் மீனாட்சி மங்கள் மஹாலில் 17.02. 2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்தும் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
இப்போட்டியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மாணவர்கள் மிகச்சிறப்பாக யோகாசனம் செய்து முதலிடம் பிடித்து 80 மாணவர்கள் தங்கப் பதக்கத்தையும், 10 மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தையும், 8 மாணவர்கள் வெண்கல பதக்கத்தையும் பெற்று தனது பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
அதேசமயம் அதிக மாணவர்கள் பரிசு பெற்றமைக் காக ரேங்கிங் பிரிவில் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேம்பியன் பட்டம் பெற்றது.
போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர் களைப் பள்ளித் தாளாளர். திரு. D. சண்முகம், செயலர் திருமதி. K.உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், திரு. S. ரவிச்சந்திரன் யோகா ஆசிரியர் துரைசாமி மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் பெற்றோரும் வெகுவாக பாராட்டினர்.
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.