கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே இரவு மற்றும் பகல் நேரங்களில் மர்ம கும்பல் சிலர் சாலை ஓரங்களில் படுத்து இருப்பவர்கள், போதையில் சுய நினைவு இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் பேருந்துக்காக காத்து இருப்பவர்களை அடித்து மிரட்டி பணம்,நகை மற்றும் செல்போன்களை பறித்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் 24 மணி நேரமும் பேருந்து நிலையம் அருகே காவலர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் மேலும் காவல் துறை சார்பில் பேருந்துநிலையத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கண்காணிக்க வேண்டும். அதே சமயம் இப்பொழுது இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
குற்றச் சம்பவங்கள் நடந்திருந்தால் காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
M.சுரேஷ்குமார்.