தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டம் புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது கருப்பூர்.இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று சமூக அறிவியல் மன்றம் மற்றும் தமிழ்க்கூடல் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. முனிஸ்வரி தலைமை வகித்தார்.பள்ளித் தலைமையாசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
சமூகவியல் மன்றத்தின் சார்பாக பட்டதாரி ஆசிரியர் மாணிக்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவின் சிறப்பு விருந்தினராக இராமனூத்து பள்ளி தலைமையாசிரியரும், குழந்தைக் கவிஞருமான மு.க. இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவ மாணவியர்களுக்கு வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளைப் பட்டதாரி ஆசிரியர்கள் கவிதா,சண்முகப்பிரியா மற்றும் வெர்ஜினியா மேகி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாகத் தமிழாசியர் பெலிக்ஸ் லூர்துராஜ் நன்றி கூறினார். விழாவில் கிராமப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் பகுதி நிருபர்,
-பூங்கோதை.