கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா அருகாமையில் உள்ள வாட்டர் ஃபால் என்னும் பகுதியில் யூனியன் வங்கியின் சார்பாக ஏடிஎம் மையம் உள்ளது.
ஆனால் இந்த ஏடிஎம் மையம் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறைக்கு சென்று பணம் எடுத்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஏடிஎம் மையம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வருமா வராதா என்ற வேதனையுடன் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். பணம் எடுக்க அருகில் உள்ள ஏடிஎம் மையத்தை விட்டு விட்டு வால்பாறைக்கு சென்று எடுத்து வர கால விரயம் மற்றும் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே செயல்படாமல் உள்ள இந்த ஏடிஎம் மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்,
-திவ்யகுமார்.