மூணாறில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்! எல்டிஎப் தலைமையின் சாலை மறியல் போராட்டம்!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் அமைந்துள்ள கன்னிமலையில் காட்டு யானை தாக்குதலில் ஆட்டோரிக்ஷா டிரைவர் மணி கொல்லப்பட்டதை எதிர்த்து எல்.டி.எஃப் ஹர்த்தால் இன்று நடைபெறுகிறது. கே.டி.ஹெச். ஊழியர்கள் சாலை மறியல், மற்றும் கடைகளும் அடைத்து போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மணி போஸ்டுமார்ட்டம் இன்று நடைபெறும். விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் மூணாறு டாட்டா டீ பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஏசக்கி ராஜா, மனைவி ரஜீனா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. நேற்று இரவு 9.30 மணிக்கு காட்டு யானை தாக்குதல் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மூணாறு கன்னிமலை டாப் டிவிஷன் பூர்வீக மணி என்று அழைக்கப்படும் சுரேஷ் குமார் என்பவர் காட்டு யானை தாக்குதலில் இறந்தார். சுரேஷ் குமாரின் ஆட்டோவில் பயணித்த கன்னிமலையைச் சேர்ந்த ஏசக்கி ராஜா, மனைவி ரெஜினா ஆகியோர் காயமடைந்தனர். நேற்று இரவு 9.30 மணிக்கு நடந்தது. ஏசக்கி ராஜாவின் மகள் பிரியாவின் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிந்து மீண்டும் வரும்போது நடந்த சம்பவம். இரண்டு நபர்கள் மற்ற மாநில தொழிலாளர்களும் இருந்தனர். மணி தான் ஆட்டோ ஓட்டியது. கன்னிமலை எஸ்டேட் பங்களாவின் அருகில் தான் இவர்கள் காட்டு யானை தாக்குதலில் சிக்கினார்.

ஆட்டோவை குத்தி காட்டு யானை வாகனத்தில் இருந்து தெறித்து விழுந்த மணியை தும்பிக்கையில் சுழற்றி எறிந்து. வீழ்ந்த மணியின் தலைக்கு கடுமையான காயம். ஆட்டோயிலிருந்த மற்ற மாநிலத் தொழிலாளிகளுக்கும் காயம் ஏற்படவில்லை. படையப்பாவும் மற்றொரு காட்டு யானை கூட்டமும் இந்த பகுதியில் காலை முதல் அலைந்து திரிந்து கொண்டிருந்தது . எந்த காட்டுயானை தாக்குதல் நடத்தியது என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்களை மூணாறில் ஹைரேஞ்ச் மருத்துவமனையில் சேர்த்தனர். மணியின் சடலம் பிறகு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் போஸ்டுமார்ட்டம் நடத்தப்படும். கடந்த மாதம் 23 ஆம் தேதி மூணாறு குண்டுமலையிலும் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-மணிகண்டன் கா

மூணாறு, கேரளா

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp