கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் எல்லா வருடம் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளில் ஒவ்வொரு அணிகளாக திரண்டு கே.டி.எச்.பி நிறுவனம் தலைமையில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியாகும். இந்தியாவிலேயே மிகப் பிரபலமாக கால்பந்து போட்டிகளில் ஒன்று ஃபின்லே 75 ஆம் ஆண்டு விளையாட்டிற்கான வேலைகள் முழுமையாக நிறைவடைந்ததாக கே.டி.எச்.பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூணாறு பல்வேறு எஸ்டேட்டுகளில் இருந்து இந்த முறை பங்கெடுக்கும் அணிகளின் எண்ணிக்கை 14. 1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலங்களில் தான் ஃபின்லே துவங்கப்பட்டது.
75 ஆண்டுகள் கடந்த பொழுது இந்த பின்லே கால்பந்து விளையாட்டு மிகப் பிரபலமாக மாறத் துவங்கியது. முன் காலங்களில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பின்லே விளையாட்டில் பங்கெடுக்கும். இது மூணாரில் மிகப்பெரிய அளவில் ஒரு மாத கால அளவில் கால்பந்து விளையாட்டு திருவிழா போன்று கொண்டாடப்பட்டது. ஆனால் இப்பொழுது அணிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளும் மிக விரைவில் நிறைவடைகிறது.
எல்லா ஆண்டுகளும் மதியத்திற்குப் பிறகு விளையாட்டு துவங்கும் விளையாட்டில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், மற்றும் மாணவர்கள் பெண்கள் ஆகியோர் விளையாட்டை கண்டு ரசிப்பார்கள்.மற்றும் கால்பந்து விளையாட்டை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள் போட்டியின் போது பலவித சண்டைகளும் ஏற்படும் சண்டைகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை அதிகாரிகளும் வருவார்கள். இன்றைய தினம் 75 ஆம் ஆண்டில் முதல் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது விளையாட்டு நடைபெறுவது மதியம் 2:30 மணிக்குத்தான், லட்சுமி எஸ்டேட் நாயமக்காடு எஸ்டேட் சூரியநெல்லி எஸ்டேட் கேடிஎச்பி டிபார்ட்மென்ட் அணியும் தான் இன்று மோத இருப்பது. பின்லே விளையாட்டு போட்டி உலகப் போர் மற்றும் கொரோனா காலகட்டங்களில் மட்டுமே நடைபெறாமல் இருந்தது மற்றும் எல்லா வருடங்களும் மிக சிறப்பாக நடந்து முடிந்ததாக கே டி ஹெச் பி தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்லே துவங்கி முதல் வருடத்தில் கல்லார் அணி தான் முதன் முறையாக வெற்றி பெற்றது. கடந்த வருடம் 74 ஆம் கால்பந்து விளையாட்டு போட்டியில் கூடாரவளை எஸ்டேட் தான் வெற்றி பெற்றது. விளையாட்டு மிகச் சிறப்பாக நடக்க நாளைய வரலாறு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு, கேரளா