கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் N.N ராஜசேகரன் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உணவின் தரம் , நாய் கடி, பாம்பு கடி, விஷம் முறிவு ஊசிகள் உள்ளிட்டவை இருப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எவ்வாறு உள்ளது என்பதையும் ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா அடிக்கடி குடிநீர் பிரச்சனை ஏற்படுவதையும் குடிநீர் தொட்டி எவ்வாறு உள்ளது என்பதையும் நேரடியாக ஆய்வு செய்தார்.
இதை பார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகளும் , வெளி நோயாளிகளும் மத்தியில் வரவேற்பு பெற்றது. மேலும் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையும் வால்பாறை பகுதியில் உள்ள கிராம செவிலியரிடமும் கேட்டறிந்தார்.
அவர்களுக்கு எஸ்டேட் பகுதிகளிலும் மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிகளிலும் போகும்போது என்னென்ன குறைபாடுகள் உள்ளது என்பதையும் கேட்டறிந்தார் மேலும் ஆய்வின்போது போது வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்தியா மகப்பேறு மருத்துவர் மகேஷ் ஆனந்தி சோலையார் டேம் ஆரம்ப சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன், முடிஸ் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவரும் கிராம செவிலியர்களும் உடன் இருந்தனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P.பரமசிவம், வால்பாறை.