கோவை மாவட்டம் வால்பாறை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் வால்பாறை துளசி கல்யாண மண்டபத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் செயலாளர் முனீஸ்வரன் கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை அறிக்கை வைத்தார் இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தங்கபாசு ஆலோசனைக்குப் பின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து புதிய தலைவராக பாஸ்கர், செயலாளராக பரமசிவம், பொருளாளராக சுகந்தி பிரியா, துணைத் தலைவராக ஜார்சன் ஜோசப்பும், குழந்தை மைக்கேல் ராஜம், அழகு ராணியும் , துணைத் தலைவராக ராம் சுப்பும், அருண்பாண்டியன். சண்முகப்பிரியா மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் தங்கபாசு பேசுகையில் தொடர்ந்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இயக்க கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறும் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆசிரிய பெருமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இக்கூட்டத்திற்கு சி ஐ டி யு சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் சிறப்புரை ஆற்றினார் மேலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வால்பாறை ஒருங்கிணைப்பாளர் கோதந்திர அய்யனார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
-M.சுரேஷ்குமார்.