கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் பூங்காவனம் அருகே தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை அளித்ததின் பேரில் தற்பொழுது தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணியினால் அப்பகுதியில் மிக அதிகமாக புழுதி பறக்கிறது மேலும் கடுப்பு சுவர் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களான கற்கள் மணல் ஜல்லி போன்றவற்றை அப்பகுதி கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.
எனவே இந்த பணியை விரைந்து முடித்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
வால்பாறை பகுதி நிருபர்,
-திவ்யகுமார்.