கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கடைகளில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளுக்கு குடிநீர், இயற்கை உபதே கழிப்பதற்கு கழிப்பிட வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாபாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்தால்தான் வாடகை செலுத்துவோம் என்று நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர் குறிப்பாக இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி நிர்வாகம் கடைகளின் மேல்கூரை ஒழுகுவதை சரி செய்வதற்கான வேலையில் இறங்கி உள்ளது அதன்படி இரண்டு வரிசை கடைகளில் மட்டும் சரி செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வியாபாரிகளும் கொஞ்சம் கொஞ்சமாக வாடகையை செலுத்தி வருகின்றனர். இதற்கு இடையில் நாங்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர்களின் அறிவுறுத்தலின்படி வருவதாக கூறிக்கொண்டு முகம் தெரியாத நபர்கள் மூலம் அடாவடித்தனமாக வாடகை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
புதிது புதிதாக நபர்கள் வந்து நகராட்சி குழு நாங்கள்தான் என்று சொல்லி வியாபாரிகளிடம் அடாவடித்தனத்தை காட்டி கந்து வட்டிக்காரர்களை மிஞ்சும் அளவிற்கு வியாபாரிகளை மிரட்டி கொடுமைப்படுத்துவதாக தெரிகிறது.
இதை வால்பாறை தமிழக வணிகர் சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வால்பாறை காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து காவல் ஆய்வாளர் தொலைபேசி மூலம் நகராட்சி தலைமை செயல் பொறியாளரிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது இனி இது போன்ற செயல் நடக்காது நகராட்சி மூலம் வசூல் செய்யும் அலுவலர்கள் அடையாள அட்டை அணிந்து வருவார்கள் அவர்களிடம் பணத்தை கொடுத்தால் போதுமானது.
மேலும் அலுவலக நேரம் முழுவதும் நகராட்சி அலுவலகத்தில் பணம் கட்டுவதற்கு
தனியாக அலுவலர் இருக்கிறார் அவர்களிடம் பணத்தை கட்டி விட்டு ரசீது பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததாக காவல் ஆய்வாளர் தெரிவித்த நிலையில் இதே நிலை தொடர்ந்தால் அனைத்து வியாபாரிகள் சம்மேளனம் மூலம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக வால்பாறையை எடுத்துச் செல்வோம் என்று தொகுதிச் செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.