அறம் செய் குழு சார்பாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு
ரூ.4,66000 மதிப்பில் 60 இருக்கைகள் வழங்கப்பட்டது.
நமது அறம் செய் குழு சார்பாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ.4,66000 மதிப்பில் 60 இருக்கைகள் 4 – 5 ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அமர்ந்து கல்வி பயிலும் சூழ்நிலையை உதவும் உள்ளங்களின் பங்களிப்போடு நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மேலும் தற்போது இரண்டாம் கட்டமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு இருக்கை வசதிகள் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நமது குழுவின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு தற்போது வரை உதவிய நல் உள்ளங்களின் விவரம்
இரா. நந்தகோபால் ஐஏஎஸ்
முருகன் ரத்தப் பரிசோதனை நிலையம் விளாத்திகுளம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இந்திராணி மாரிமுத்து, விஜயலட்சுமி சித்தண்ணன்,ரேவதி சீனிவாசன்,இரத்தினமணி ராஜன்.
உதவிய நல் உள்ளங்களுக்கு மீண்டும் ஒருமுறை அறம் செய் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு நமது இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உதவக்கூடிய நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கவும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.