கோவை மாவட்டம் வால்பாறை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்துடன் இணைந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் நடத்தும் குரூப் தேர்வு டி என் பி எஸ் சி குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் துவக்க விழா வால்பாறை நூலகத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களும், வால்பாறை நூலக அலுவலர்களும் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.
அப்பொழுது நாங்கல்லாம் படிக்கும் பொழுது இந்த மாதிரி போட்டி தேர்வும் அதற்கு பயிற்சி மையமும் இல்லை ஆனால் இன்று தமிழக அரசு உங்களை எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவசமாக தரமாக வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பயிற்சி முகாம் நடத்துகிறோம் வந்து பயனடையுங்கள் நாங்களும் உங்களை மாதிரி தான் சிரமப்பட்டு படித்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு உயர் அதிகாரிகள் மாணவ மாணவியரிடம் வரவேற்பு பெற்றது.
இந்நிகழ்வில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் ஜேப்பியார், செல்வக்குமார் மற்றும் தி மு க உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வால்பாறை நகர மண்டல தலைவி அழகு சுந்தரவல்லி ஆயிரம் ரூபாய் வழங்கி நூலகப் புலவராக தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அரசு நிகழ்ச்சிகளில் ஆளும் கட்சி தி மு க நிர்வாகிகள் கலந்து கொண்டதும் மேலும் இந்நிகழ்ச்சிக்கு துண்டு பிரசவம் வெளியிட்டதால் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் மேலும் திமுக நிர்வாகிகளும் அரசு அலுவலர்களும் ஒரே மேடையில் அரசு விழாவில் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று தெரிவித்தனர்.
-P.பரமசிவம், வால்பாறை.