தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள எஸ்ஏ மஹாலில் திமுக கட்சியின் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி அவர்களை வரவேற்று வாழ்த்துக்களைக் கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேட்பாளருக்கு சால்வை அணிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது திமுக கட்சியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற. வேட்பாளர்கே ஈஸ்வரசாமி பேசியதாவது:-
பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து வேறு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் அரசிடம் இப்போது திட்டம் இல்லை.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகளின் குறைகளை தமிழக அரசு,ஒன்றிய அரசுக்கு தெரிவித்து தேவையானவற்றை செய்து கொடுப்பேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதனை அடுத்து இப்பகுதி பொதுமக்கள் உங்களுடைய வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக கட்சியின் செயலாளர் T.யுவராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் யுவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ ஆர் வி சாந்தலிங்ககுமார், ஆனைமலை பேரூர் கழக நகரச் செயலாளர் டாக்டர் AB.செந்தில்குமார், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, ஆனைமலை பேரூராட்சியின் துணைத் தலைவர் AH.ஜாபர்அலி,
ஆனைமலை பேரூர் கழக நகரத் துணைச் செயலாளரும் கவுன்சிலருமான ஏ அபுதாஹீர், அம்பராம்பாளையம் திமுக கட்சியின் பைஜில் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு அறிமுக விழாவில் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆனைமலை நிருபர்
-P.சின்னமுத்துச்சாமி.