ஆபத்தை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்ற வால்பாறை தமிழக வணிகர் சம்மேளணம் சார்பாக வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் அருகே வானுயர்ந்த மரங்களால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வால்பாறை தமிழக வணிகர் சம்மேளணம் சார்பாக வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன் அவர்களிடம் தொகுதிச் செயலாளர் சரவணன், பொருளாளர் சிவா என்கின்ற அழகன் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். மனுவில் மதிப்புக்குரிய வால்பாறை வட்டாட்சியர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வளையல் கடை வீதியிலும் வால்பாறை நூலகத்துக்கு முன்பும் பல வருடங்களாக மரங்கள் வளர்ந்து பராமரிப்பு இல்லாமல் அதிகப்படியான கிளைகளோடு தைல மரங்கள் மிகுந்த அடர்த்தியாகவும் உயரமாகவும் உள்ள காரணத்தினால் மழைக்காலங்களிலும் காற்று அதிகமாக வீசும் நேரங்களிலும் அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்குள் இருக்கக்கூடிய வியாபாரிகள் பொதுமக்கள் அனைவருக்கும் மரண பயத்தை கொண்டு வருகிறது.

வளையல் கடைகளில் உள்ள வியாபாரிகளும் நூலகத்துக்கு வருபவர்களும் மிகுந்த அச்சத்துடன் பயத்துடன் எப்பொழுது இந்த மரம் கீழே விழுந்து ஏதாவது உயிர்சேதம் ஏற்படுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து மரத்தின் வாதுகளை அகற்றி அப்பகுதியில் உள்ள வியாபாரிகளையும் பொதுமக்களையும் நூலகத்துக்கு வரும் மாணவச் செல்வங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பல வருடங்களாக மரங்களை அகற்ற பல்வேறு அமைப்புகள் மனு கொடுத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு தாங்கள் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே
போர்க்கால அடிப்படையில் இந்த பணியை முடிக்க தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த மனுவே எங்கள் அமைப்பு மூலம் சமர்ப்பிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லதை நல்லோர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு,

செய்தியாளர்
வால்பாறை,
-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp