கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், பெருமாள்கோவில்பதி பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாயம் தோட்டம் உள்ளது. இங்கு வாழை,தென்னை உட்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றார்.
சுமார் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டங்கள் 3லட்சம் மதிப்பிலான பயிர்களை முழுமையாக சேதப்படுத்திவிட்டு சென்று விட்டதாக வேதனை தெரிவித்தனர். விவசாய நிலத்திற்குள் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வனத்தையொட்டி இருக்கக்கூடிய விவசாய தோட்டத்திற்கு சோலார் மின் வேலி வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு மின் வேலி அமைக்கப்பட்டால் யானைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றலாம் என தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.