தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை கழகாசலமூர்த்தி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு கழகுமலை தெற்கு பேரூராட்சி இலந்தை குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
பின்னர் கயத்தாறு கிழக்கு ஒன்றியம் அகிலாண்டபுரம் மற்றும் திருமலாபுரம் கிராமத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி அவர்கள் ஊழல் வழக்கில் இருந்து பாதுகாக்க தேர்தலில் நிற்கிறார். கடம்பூர் ராஜு பேசியது:
இந்த சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டங்கள் நான் செயல்படுத்தி உள்ளன் ஆனால் கனிமொழி அவர்கள் எந்த திட்டமும் இந்த கிராமத்திற்கு செய்யவில்லை என பேசினார். அதைத் தொடர்ந்து சிதம்பரபுரம் கடம்பூர் ராஜு அவர்கள் சொந்த ஊரில் வாக்கு சேகரிப்பு இருந்து.
அப்போது கடம்பூர் ராஜு பேசியது: தமிழ் நாட்டின் நலனுக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனியாகப் போட்டியிடுகிறோம். எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சொந்த ஊருக்கு திருமண மண்டபம் நியாய விலை கடை குடிநீர் வசதி என பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்தான் ஆனால் கனிமொழி கருணாநிதி அவர்கள் பாராளுமன்ற நிதியில் இருந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தவில்லை என பேசினார் தொடர்ந்து கடம்பூர் பேரூராட்சி பஜாரில் வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளம் பெண்கள், பாசறை செயலாளர் கவியரசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா வண்டானம் A.கருப்பசாமி, கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர்S.M. சாமிராஜ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முனியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜ்குமார், சிறுபான்மை ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், S. முருகலிங்கம் – மாணவரணி ஒன்றிய செயலாளர், கோவில் பிள்ளை MGR அணி சுடலைமணி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் வீர பெருமாள், கலைப் பிரிவு அருளானந்தம், கித்தேரியான், தியாக ராஜன், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.