கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிகளில் சுற்றுலாவிற்கு வருபவர்கள் வனவிலங்குகளை கண்டவுடன் செல்பி எடுத்துக் கொள்வதும் வீடியோ எடுப்பதும் இருசக்கர வாகனங்களை அருகில் கொண்டு சென்று ஒலி எழுப்ப செய்து அதனை கோபப்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சில மாதங்களாகவே காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. காரணம் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதன் பெயரில் அதை தொந்தரவு செய்வது அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர் .
மூணார் லட்சுமி எஸ்டேட்டை சார்ந்த செந்தில் மற்றும் ரவி என்ற இரு நபர்கள் மாங்குலப் பகுதியை சார்ந்த கபாலி என்ற யானை சாலையின் அருகே நின்று கொண்டிருக்கும் பொழுது அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த வனத்துறையினர் உடனடியாக இவர்கள் இருவர் பெயரிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் தற்பொழுது தலைமறைவாகியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை இனிமேல் நடைபெற்றால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனவிலங்குகளை கோபப்படுதுபவர்கள் மீது நடவடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதுகாப்புடன் இருக்கவும் வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூனாறு.