கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் ஓரங்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் பதிக்கும் வேலை நடைபெறும் இந்த சூழ்நிலையில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சாலை பணி நடைபெறுவதற்கான எந்தவித முன்னறிவிப்பு எச்சரிக்கை பலகைகளும் இல்லாமல் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த பகுதியில் அதிக அளவு காட்டு மாடுகள் உள்ளதால் அவைகளும் இரவு நேரத்தில் பள்ளங்களுக்குள் விழும் அபாயம் உள்ளது. இன்று காலை கூட அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார் எனவே அந்த பகுதியில் சாலையில் கொட்டப்பட்ட மண்ணை அகற்றிவிட்டு பணி நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை நிருபர்
-திவ்யகுமார்.