கொடியேற்ற அனுமதி மறுப்பு! – விசிக-வினர் சாலை மறியல்!தேவகோட்டையில் பரபரப்பு!!!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியத்தில் பனிப்புலான்வயல் கிராமத்தில் கடந்த 1990 முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. கடந்த 2010 இல் தமிழர் இறையாண்மை மாநாடு சென்னையில் நடந்த போது பனிப்புலான்வயலில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப்பகுதியில் புதிதாக கட்சியின் கொடிக்கம்பத்தினை நட்டு கொடியை ஏற்றி வைத்தனர். கொடிக்கம்பம் ஆனது கொரோனா காலத்தில் சேதமடைந்த நிலையில் புதிய கொடிகம்பம் நடுவதற்கு அனுமதி கேட்டு பலமுறை காவல் நிலையத்தை ஊர் மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுகியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் 03-03-2024 அன்று பழைய கொடிக்கம்பம் இருந்த அதே இடத்தில் புதிய கொடி கம்பம் நட்டு கொடியேற்றி பொதுக்கூட்டமும் நடத்த இருப்பதாக சுமார் பத்து நாட்களுக்கு முன்பே அப்பகுதிக்குரிய காவல் நிலையத்தில் விசிக நிர்வாகிகள் அனுமதி கோரி கடிதத்தை அளித்துள்ளனர். அப்போது காவல்துறையினர் புறம்போக்கு நிலம் மற்றும் பொது இடங்களில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி இல்லை எனவே நீங்கள் பட்டா இடத்தில் வேண்டுமானால் உங்களது கொடிக்கம்பத்தை ஊன்றிக் கொள்ளுங்கள் என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. ஆதலால் விசிகவினர் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு பட்டடா இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தில் கொடி கம்பத்தை நடுவதாக முடிவு செய்து அந்த தகவலை காவல்துறையினருக்கும் தெரிவித்து அனுமதியும் வாங்கியுள்ளனர்.

இதற்கிடையில் மாற்று சமூகத்தினர் மற்றும் மாற்றுக் கட்சியினர் தூண்டுதலின் பேரில் இன்று காலை காவல்துறையினர் கொடிக்கம்பம் நடவும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்தால் கொதிப்படைந்து தேவகோட்டை நகரச் செயலாளர் மு.அமுதன் தலைமையில், தேவகோட்டை தெ) ஒன்றிய செயலாளர் பி.ஆர்.இரும்பொறை, தேவகோட்டை (வ)ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் சசிகுமார், ஜோதி, இளையராஜா ஆகியோர் ஒருங்கிணைப்பில் திரண்டு தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கிராம மக்களுடன் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேற்படி தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொடியேற்ற அனுமதி அளித்ததின் பேரில் சுமார் 50 அடி உயர கொடிக்கம்பத்தினை பனிப்புலான்வயல் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நிறுவியுள்ளனர்.

இதுகுறித்து தேவகோட்டை நகரச் செயலாளர் மு அமுதன் கூறுகையில் “தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆரம்பித்த 1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு கொடிக்கம்பம் புதியதாக ஏற்றுவதற்கோ அல்லது இருந்த இடத்தில் மறுபடியும் கொடிக்கம்பம் நடுவதற்கோ நாங்கள் மிகவும் போராட வேண்டி உள்ளது ஏனைய கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய சில விடயங்கள் கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு போராடினால் தான் கிடைக்கிறது இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் காவல்துறையானது முதலில் அனுமதி கொடுத்து பின் மறுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp