கோவையில் அமீரகத்தின் பிரபல நிறுவனமான லுலு மால் தமிழகத்தில் கால் பதிக்கும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் முகஸ்டாலின் துபாய் சென்ற போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் முதலில் கோவை மாவட்டத்தில் லுலு நிறுவனம் காலடி எடுத்து வைத்து சுமார் 9 மாதங்கள் ஆகிறது. லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காரணம் இங்கு அறிவிக்கப்படும் ஆபர்கள் தான். சமீபத்தில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி கெட்டுப்போன பொருட்கள் இல்லை என கூறினர். இதனைத்தொடர்ந்து பல்வேறு ஆபர்களை அறிவித்து மக்களை தன்பக்கம் லுலு நிறுவனம் தக்க வைத்து வருகிறது. இவ்வாறு இருக்க அருகில் உள்ள வணிகர்களோ லூலு மார்க்கெட்டின் ஆஃபர் அறிவிப்பால் தங்களது வியாபாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை கூறிவருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன் விலையை வெகுவாக குறைத்து லுலு வில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இரண்டு புதிய ஆபர்களை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக லுலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் இறைச்சி மார்க்கெட் திருவிழா இன்று முதல் ஏபரல் மாதம் 10-ந் தேதி வரையும், அதேபோல் இப்தார் கவுண்ட்டர் நோன்பை முடித்து சத்தான உணவு பொருட்களை வாங்கவும், அந்த பொருட்களுக்கு தள்ளுபடியில் விலையும் கொடுக்கவும் ஏற்பாடு செயய்ப்பட்டுள்ளது. இறைச்சி மார்க்கெட்டில் ஹாலால் செய்து வெட்டப்பட்ட இறைச்சிகளுக்கு தள்ளுபடியில் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், புதிதான நல்ல இறைச்சிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இறைச்சி வியாபாரிகள் எங்கு தங்களது வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.