கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னகானால் கிராம பஞ்சாயத்து பகுதியில் யானைகளின் அட்டகாசம் காலங்காலமாக இருப்பினும் தற்பொழுது காட்டு யானைகளின் அட்டகாசம் சற்றே அதிகரித்துக் கொண்டே வருகிறது. வனப்பகுதியில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகமாக வந்து தொந்தரவு செய்வதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சில மாதங்களுக்கு முன்பாக அரிசி கொம்பன் என்ற யானை பொது மக்களுக்கு பல தொந்தரவுகளை கொடுத்ததினாலும் சில பல மரணங்களை ஏற்படுத்தியதாலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி அதனை வனத்துறையினரால் தமிழ்நாட்டில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோன்று அதைத் தொடர்ந்து சக்கை கொம்பன் யானை தற்பொழுது தொந்தரவு செய்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த யானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்தது நினைவில் கொள்ளதக்கது. நேற்று சின்ன காலில் உள்ள 301 என்ற காலனியில் புகுந்து ஒரு வீட்டை சேதப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதில் வசித்து வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தி உள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு இலவசமாக கொடுத்த வீடு தற்பொழுது இதனை சரி செய்யக் கூட வழியில்லாமல் தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு ஏதாவது வீட்டை சரி செய்யவோ அல்லது புதிய வீடு கட்டி தரவோ வேண்டுமென தங்களுடைய கோரிக்கையில் கூறியுள்ளனர் மட்டுமல்லாது வனத்துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வரும் இந்த யானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அல்லது அதற்கான சரியான தடுப்பு நடவடிக்கைகள் எட்டுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூனாறு.