கேரள மாநிலம் திருச்சூர் ஆறாட்டுப்புழா கோவிலில் ஆறாட்டு சடங்கு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெறும் இதில் யானைகளுக்கு தங்க அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து செல்வர் அதன்படி நேற்றைய ஊர்வலம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த போது திடீரென 2 யானைகள் சண்டையிட்டுக் கொண்டன இதைக் கண்ட பக்தர்களும் பொதுமக்களும் அலறி அடித்து தலைதெறிக்க உயிர் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் ஓடினார்கள்.
அப்பொழுது யானைகளால் தூக்கிச் செல்லப்பட்ட நபர்கள் தரையில் வீசப்பட்டு காயம் அடைந்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோட முயன்ற பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த அர்ஜூனன் என்ற யானை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடியது பின்னர் யானை பாகன்களால் யானைகள் அடக்கி ஒடுக்கப்பட்டது.
இதனால் இப்பகுதியில் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் யானைகள் சண்டையிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
M.சுரேஷ்குமார்.