தூத்துக்குடியில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும் புதிய ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் நியாய விலை கடை ஊழியர்களை மாலை 6 மணி க்கு மேல் வீடு வீடாக சென்று விரல் ரேகை சரிபார்ப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவை ரத்து செய்ய வேண்டும் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாய கருவிகள் டிராக்டர், லாரிகள் போன்றவற்றை விற்பனை செய்ய கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப்போல தூத்துக்குடி மாவட்டத்தில் 154 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் 700 நியாய விலை கடைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் வைத்து தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பெண் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.