பாபநாசம் – அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து சேவை துவக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தி பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். 463B, புதிய பேருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கு நடை எடுத்து பாபநாசத்தில் 7.35 மணிக்கு புறப்பட்டு கபிஸ்தலம் -திருவையாறு -அரியலூர் புகைவண்டி நிலையம் என 4 நடைகளாக இயக்கப்படும் தடத்தில் புதிய பேருந்தினை (03.03.2024) காலை 07.00 மணிக்கு பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கல்யாணசுந்தரம் , திரு.எஸ்.ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் திரு.கே.எஸ்.மகேந்திரகுமார், கும்பகோணம் மண்டல பொது மேலாளர் திரு.கே.இளங்கோவன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சுமதிகண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.பூங்குழலிகபிலன், துணை மேலாளர் (வணிகம்) திரு.S.செந்தில்குமார், தஞ்சாவூர் கோட்ட மேலாளர் திரு.பாலமுருகன் , கும்பகோணம் நகர்-1 கிளைமேலாளர் திரு. S.சிவமயில்வேலன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் திரு. கோவி. அய்யாராசு, பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் திரு.கபிலன், பயணிகள் சங்க தலைவர் திரு.ரயில் சரவணன், பாபநாசம் வர்த்தக சங்க தலைவர் திரு.குமார், மமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பொகர்தீன், பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், அம்மாபேட்டைஒன்றிய தலைவர் ஜெகபர்தீன், பாபநாசம் பேரூர் செயலாளர் ஜாஹிர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மைதீன்,தஞ்சை.