தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ஓட்டப்பிடாரத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய போலீசார் அணிவகுப்பு நடந்தது. ஓட்டப்பிடாரம் காவல் நிலையம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அக்ஜய்அணில் தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் ஓட்டப்பிடராம் மெயின் பஜார், வடக்கு பரும்பூர், தெற்கு பரும்பூர் வழியாக சென்று முப்புலிவெட்டியில் நிறைவடைந்தது. இதில், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் சின்னத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ், முத்துமணி, மூக்கன், தினகரன் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.