கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தினால் செடி கொடி மரங்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளும் குடிநீரின்றி தவித்துப் போய் உள்ளன. இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உலா வரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதிகளில் தற்பொழுது அடிக்கடி காட்டு தீ பரவி வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வால்பாறை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது சமூக விரோதிகளின் செயலா என்ற கோணத்திலும் விசாரித்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.