கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதியில் 25 கிலோமீட்டர் தூரம் வரும் குண்டலை எஸ்டேட்டில் ஸ்ரீ முருகன் திருக்கோவிலில் வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் முருகனுக்காக 52 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் திருவிழா கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணிக்கு விநாயகர் முருகன் பூஜைகளுடன் தொடங்கப்பட்ட திருவிழா மாலை 4 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு காளியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் ஸ்ரீ முருகன் கோவில் வரை கொண்டுவரப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பழனி பாதயாத்திரை குழுவினரின் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு விநாயகர் முருகன் காளியம்மன் பூஜைகள் மற்றும் காலை 8 மணிக்கு ஊர் அழைப்பு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சி காலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும் இறுதியாக இரவு 7 மணிக்கு தொடங்கி சப்பர ஊர்வலம் இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது.
52 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஒலி&ஒளிஅமைத்துக் கொடுத்தது ஸ்ரீ முருகன் சவுண்ட் சர்வீஸ் குண்டளை. திருவிழாவில் ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கே டி ஹெச்பி கம்பெனி நிர்வாகிகள், பஞ்சாயத்து மெம்பர்கள் அனைவரும் பங்கெடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா மூணாறு,கேரளா.