கோவை மாநகர் சுந்தராபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் முக்கிய சாலையான சாரதா மில் ரோடு பகுதியில் தற்பொழுது மாநகராட்சி சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலையில் தான் செட்டிபாளையம் மற்றும் வெள்ளலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளங்கள் இருப்பதால் முன்னால் செல்லும் வாகனம் வலது புறமாகவும் இடது புறமாகவும் மாறி மாறி செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த குழப்பம் அடைந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் சாலை முழுவதும் ஒரே புழுதி மயமாக உள்ளதால் சாரா மில் ரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் மண் தூசியால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் தோண்டப்படும் பள்ளங்களில் பணி முடிந்தவுடன் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் அந்த சாலை வழியாக செல்லும் கன சக்கர வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்து ஏற்பட்டு நின்று விடுகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாரதா மில் ரோடு சாலையில் செல்லவே வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதேபோன்று தண்ணீர் சப்ளை செய்யும் வாகனம் ஒன்று சாரதா மில் ரோடு சாலையில் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது.
சாரதா மில் ரோடு சாலையானது தற்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற சாலையாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமற்றுகின்றனர். இந்த சாலை வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அனைவருமே மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே இதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விபத்துக்கள் நடந்த பிறகு மாநகராட்சி நிர்வாகம் வந்து பார்ப்பதை விட விபத்து நடப்பதற்கு முன்னால் வந்து பார்த்து இதற்கு ஒரு தீர்வு காண்பதே மனிதாபிமான செயலாக இருக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.