கோவை மாவட்டம் வால்பாறை குமரன் ரோடு எஸ்.பி மஹாலில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
வால்பாறை பாலாஜி துணிக்கடை நகரச் செயலாளர் பி. ரவீந்திரன் தலைமையில் மற்றும் மாவட்டச் செயலாளர் எல் ஜே.ஜே ஜெகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.கே சாமி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
முன்னதாக மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனைக் கிணங்க வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் பூத் வாரியாக கமிட்டி அமைப்பது, பாராளுமன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கடினமாக உழைத்து வெற்றி பெறச் செய்வது, மேலும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசுகையில்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மறைந்தாலும் நம்மை விட்டு மறையாத நமது நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது அமைப்பின் மூலம் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம், செயல்படுவோம் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் பிரஸ் பாலன், ராமதாஸ், சரவணகுமார் ,செல்வராஜ், தர்மராஜ், விஜயலட்சுமி, விஜயதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிவில் அழகன் என்கின்ற சிவா நன்றியுரை கூறினார்.
-P.பரமசிவம், வால்பாறை.