கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்து கழக டிப்போவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.எஸ்.பிரியங்கா ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி பேசுகையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற அரசு திராவிட மாடல் ஆகும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதியாக மகளிர்க்கு பேருந்து இலவச பயணத்திட்டம் செயல்படும் என்று தேர்தல் வாக்குறுதியை மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மகளிர்க்காக இலவச பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டது ஆனால் மலைப்பகுதியில் அமல்படுத்த முடியாமல் இருந்ததால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர் இதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது அதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் இருக்கும் மகளிர்கள் பயனடையும் வகையில் இன்று வால்பாறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக எஸ்டேட் பகுதியில் வால்பாறைக்கு தினந்தோறும் தனது வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு வரும் மகளிர்க்கு திட்டம் மிகவும் பயனடையும் அவர்கள் பேருந்து இலவசமாக பயணம் செய்யும்போது பேருந்து கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் அதேபோல மகளிர்க்காக மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இது போன்ற செயல் திட்டங்களை வகுப்பது திராவிட மாடல் அரசு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது இன்னும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திட்டமிட்டுள்ளார் இதே கருத்தில் கொண்டு திராவிட கழக அரசுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலாளர், மற்றும் உயர் அதிகாரிகள், வால்பாறை வட்டாட்சியர், நகர மன்ற தலைவர், துணைத் தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் , வால்பாறை நகரச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு இலவச தையல் மெஷின்,அரசு மாணவர் விடுதிக்கு கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டதால் இப்பகுதி பெண்கள் சந்தோசம் அடைந்தனர் சந்தோஷத்தை வெளிப்படுத்த இனிப்புகளை வழங்கி அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
வால்பாறை, P.பரமசிவம்.
One Response
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்களின் கையில் காசு கிடைக்கிறது.