கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் இருந்தும் தரமான கட்டிடங்களும் பொதுமக்கள் சென்று வர தரமான சாலைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் மருத்துவமனை பெயரளவுக்கு மட்டுமே உள்ளது இப்பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் மக்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். மருத்துமனைக்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் கிடையாது. பாதுகாப்பான கட்டிடங்கள் கிடையாது உரிய சிகிச்சை கிடைக்காமல் வால்பாறை பொள்ளாச்சி போன்ற பகுதிக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள் அதேசமயம் அடிக்கடி வனவிலங்கு தொல்லையும் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் பயனில்லை அரசு மூலம் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் முகாமிலும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இன்று தமிழகம் முழுவதும் சாமானிய மக்களின் வாழ்வாதத்தை பாதுகாக்க மருத்துவ துறை சிறந்து விளங்குகிறது. ஆனால் முடீஸ் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. அரசு பாதுகாப்பான கட்டிடங்களை கட்டிக் கொடுக்கலாம். ஆனால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் இடம் கொடுக்க மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டும் எழுகிறது.
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனி நபரிடமோ, தனியார் இடமோ இடமிருந்தால் அரசு நேரடியாக கையகப்படுத்தி அந்த இடத்துக்குரிய அன்றைய நிலையின் விலையை தீர்மானித்து சம்பந்தப்பட்டவரிடம் இடத்தை கையகப்படுத்தி சாமானிய மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கலாம். ஆனால் கோவை மாவட்டம் வால்பாறை ஒரு விதிவிலக்காகவே உள்ளது அனைத்து எஸ்டேட்களும் தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாததனால் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக தான் உள்ளது. இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான கட்டிடத்தைக் கட்டி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நமது நாளைய வரலாறு நிருபர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததில் சமூக ஆர்வலர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரிய வந்தது இதை சரிசெய்ய இப்பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் நினைத்தால் சாமானிய மக்களை பாதுகாக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை அரசு நடவடிக்கை எடுக்குமா
பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் வால்பாறை,
-P.பரமசிவம்.