கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வன விலங்குகள் குடிநீரின்றி அலைமோதும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டங்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் கருக தொடங்கியுள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வனத்தில் உள்ள வனவிலங்குகள் குடிநீரின்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல், வெயிலின் தாக்கத்தினால் அம்மை நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதனைக் கண்டு வால்பாறை சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இது போன்ற அம்மை நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.