தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில், புதிதாக கலைஞர் நூலகத்தை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் TNPSC, காவல்துறை போன்ற பல வகையான போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் உரிய ஏராளமான புத்தகங்களும், JEE, NEET உள்ளிட்டு தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, சமூக சிந்தனைகள் கூடிய பல்வேறு வகையான நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், நாளிதழ்கள் என அனைத்தையும் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்… இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.