தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 100 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் லாரி விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தகவல். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகையாபாண்டி என்பவரின் மகன்பாண்டி(23), தஞ்சாவூர் -புதுக்கோட்டையில் இருந்து 100 டன் நிலக்கரி ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை மதுரை TO தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூக்க கலக்கத்தில் பாலத்தின்மீது மோதி லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரி தலை கீழாக கவிழ்ந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நிலைகுலைந்து நெருங்கியது, லாரியில் இருந்த 100 டன் நிலக்கரி ஓடையில் சிதறியது. இதனை அடுத்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், விபத்துக்குள்ளாகி சிறு காயம் அடைந்த லாரியின் ஓட்டுநர் பாண்டியை முதலுதவிக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜேசிபி வாகனம் மூலம் நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்து ஏற்பட்ட இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது,சிந்தலக்கரை வெட்காளியம்மன்கோவில் அருகே 500 மீட்டருக்கு முறையான அறிவிப்பு பலகை மற்றும் இரவில் மிளிரும் ஸ்டிக்கர் போதுமானதாக வைக்கப்படவில்லை, அதேபோல் தூத்துக்குடி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் ஒட்டுப்போட்டும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சுங்கவரி வசூல் செய்யும் சுங்கச்சாவடியினர் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் இன்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.