2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தமிழகத்தில் எவ்வளவு பெரிய விஸ்வரூபம் ஏற்படுத்தியதோ அதையும் தாண்டி போதைப்பொருள் கிட்டங்கியாக தமிழகம் மாறி இருக்கிறது தமிழக அரசுக்கு எதிராக போதைப் பொருள் எதிர்ப்பு அலை வரும் மக்களவைத் தேர்தலில் தேர்தலில் பிரதிபலிக்கும் : ஓட்டப்பிடாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ பேட்டி
ஜாபர் சாதிக் கைது விவகாரத்தில் தமிழக ஆளுநரை இன்று காலை 11.30 மணி அளவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருப்பதாக தெரிவித்த அவர், மேலும் ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் இந்த விஷயத்தில் கருத்து கூற இயலாது என்றாலும், அவர் திமுகவில் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் மிகவும் நெருக்கம் காட்டி வந்துள்ளார். தொடர்ந்து திரைப்படத் துறை, ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வந்துள்ளது. அவரிடம் நடைபெறும் விசாரணைக்கு பின் பல்வேறு அதிர்ச்சி கட்ட தகவல்கள் வெளியாகும் என்றார். மேல்மட்டத்தில் எவ்வளவு தொடர்பு அவருக்கு உள்ளது என்பதை மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்கள் என்றார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தமிழகத்தில் எவ்வளவு பெரிய விஸ்வரூபம் ஏற்படுத்தியதோ அதையும் தாண்டி போதைப்பொருள் கிட்டங்கியாக தமிழகம் மாறி இருக்கிறது என்பதற்கு இது மூல காரணமாக இருக்கும் என்பதற்கு இது மூல காரணமாக இருக்கும் என்றார்.
இதை கண்டித்து வருகிற 12-ம் தேதி மாநிலம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி மக்களின் கவனத்திற்கும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கைது செய்தால் மட்டும் போதாது அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் உண்மை செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் இதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
திமுகவின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம், மது போதை, கஞ்சா, குட்கா பொருட்களின் கேந்திரமாக தமிழகம் விளங்கி வருவதாக குற்றம் சாட்டினார் கேந்திரமாக தமிழகம் விளங்கி வருவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து,தமிழகத்தில் வாழ்வதற்கு மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இதனால் திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறையும் என்றார்.இந்த ஆட்சி இருந்தால் தமிழகமே போதை மாநிலமாக மாறிவிடும், போதைப் பொருள் எதிர்ப்பு அலை இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழக அரசு போதை பொருள் விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு பால் விலை ஏற்றம் போன்ற பல்வேறு சுமைகளை சுமத்தி இருக்கிறது இதனால் இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்றார் சுமத்தி இருக்கிறது இதனால் இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்றார். அதிமுக தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளும் வெற்றி பெறும் என்றார் மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார்.
திமுக ஏற்கனவே இருந்த கூட்டணியை புதுப்பித்துள்ளனர் புதிதாக யாரையும் சேர்க்கவில்லை என்றார். புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார். திமுகவின் மேல் உள்ள எதிர்ப்பு அதன் கூட்டணி கட்சிகள் மீதும் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.