தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரம் மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தப்பு தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ;
இன்றைக்கு தமிழகம் சட்டம் ஒழுக்கில் சந்திசிரித்து… அமைதிக்காக இருந்த தமிழகம் அமளிக்காடாக இருக்கிறது என்று சொன்னால் அதனால் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்கக் கூடாது.
- திமுக தான் எங்களின் எதிரி வேட்பாளர்… இரட்டை இலைக்கும் – உதயசூரியனுக்கும் தான் போட்டி.
- தூத்துக்குடி ஸ்டார் தொகுதியெல்லாம் இல்லை… அப்படி கள நிலவரமும் இல்லை,கடந்த 4 நாட்களாக இங்குள்ள நிலைமையை பார்த்தால்.. அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி நிச்சயமாக 2 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நிலை இருக்கிறது.
- எத்தனை அணிகள் அமைந்தாலும் களத்தில் போட்டி என்பது அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் – திமுக தலைமைதான கூட்டணிக்கும்தான்.
- தூத்துக்குடியில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்பதற்கு அதிமுக பயப்படுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள்.
- அதிமுக பிறந்த குழந்தையாக இருக்கும்போதே தேர்தலை சந்தித்த ஒரு இயக்கம் தமிழகத்திலேயே வேட்பாளர் அறிமுக கூட்டத்தையும், பிரச்சாரக் கூட்டத்தையும் முதன்முதலாக தொடங்கியது தூத்துக்குடி பாராளுமன்றத்திலே தான்… முதல் தோற்றம் வெற்றியை தரும் என்பதற்கு அடையாளமாக அந்த கூட்டம் பிரம்மாண்டளவில் நடைபெற்றதைப் பார்த்து திமுக கூடாரமே கருகி போய்விட்டது.
- தேர்தலில் வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றிய கட்சி திமுக, தமிழகத்தை அமைதிக்காடாக வைத்திருந்த ஆட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அதனால் அதிமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 10 தாலுக்காவில் 5 தாலுகாக்களுக்கு மழை வெள்ள நிவாரணம் ரூ.1000 மட்டும் கொடுத்து ஓரவஞ்சனை செய்தார்கள்.
இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேசிய போது;
- திமுக வேட்பாளரை நீங்கள் அவர்களின் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சிறப்பு விருந்தினராக வந்து செல்வார்கள்.. ஆனால் நான் அப்படி கிடையாது.
- நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் விவசாயத்தைப் பற்றி நன்றாக தெரியும்.
- என்னை உங்கள் சகோதரனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இன்றைக்கு நான் உங்கள் முன் வேட்பாளராக நிற்கிறேன் என்று சொன்னால் அதற்கு எல்லாமே கடம்பூர் ராஜூ அண்ணாச்சிதான் என்று உருக்கமாக பேசினார்.
-பூங்கோதை, விளாத்திகுளம்.