தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள், மிக முக்கிய நபர்களின் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் தலைமையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் எந்த பிரச்சினைகளும் இல்லாத வண்ணம் சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆனது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அமைதியாக நடந்து முடிந்தது.
அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மத்திய காவல் படை,தமிழ்நாடு சிறப்பு காவல் படை,தமிழ்நாடு ஆயுதப்படை, மற்றும் தாலுகா காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடங்கிய நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அதனை பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள், மத்திய ரயில்வே படை, கேரளா ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
-P.இந்திரன், கன்னியாகுமரி.