கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சாலை தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையினரால் வருவாய்த்துறையினரிடம் அனுமதி கோரியதை வருவாய்த்துறையினர் நிராகரித்துள்ளனர.
இதுபற்றி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வெற்றிவேல் கூறியதாவது:
பொள்ளாச்சி ஆனைமலை சாலை தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிடப்பட்ட தகவல் வெளியானதும், பல்வேறு சமூக அமைப்புகளோடு இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையும் வன்மையாக கண்டித்தது.
இந்தநிலையில், 21-04-2024 அன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வெளிட்ட அறிக்கையில், பொள்ளாச்சி ஆனைமலை சாலை தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையினரால் வருவாய்துறையினரிடம் அனுமதி கோரியது.
இதையடுத்து, வருவாய்த்துறையினரால் புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்ட கோப்பு பரிசீலனை செய்யப்பட்டதில் அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை உள்ள சாலை தற்போது வாகனப் போக்குவரத்துக்கு போதுமானதாக உள்ளது. மேலும், மரங்கள் வெட்டி அகற்றப்படும் பட்சத்தில் இயற்கை பாதுப்புகளான மழைப்பொழிவின்மை இயற்கை அழகு சீர்கெடும் எனவே 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி கோரியதை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் வெளிட்ட அறிக்கையை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை முழுமையாக வரவேற்கிறது. அந்தப்பகுதியில் உள்ள சாலையோர இருபுறங்களிலும் அடர்த்தியான மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் பல்வேறு பறவைகள், தங்களின் வீடுகளாக பயன்படுத்தி வருகிறது. 27 மரங்கள் அல்ல 27 உயிர்கள். 27 மரங்களை வெட்ட நெடுஞ்சாலைதுறையினர் அனுமதி கோரியதை நிராகரித்த, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப. அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. பறவைகள் தங்களின் வீடுகளில் தொடர்ந்து தங்கிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
மேலும், சந்திப்பு மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்டுவதற்கு மாறாக, அந்த பகுதிக்கு மட்டும் மாற்று பாதை அமைக்க, அதாவது போகும் வழிப்பாதை ஒன்றும். வரும் வழிப்பாதை ஒன்றும் உருவாக்க நெடுஞ்சாலைதுறையினர் ஆலோசிக்க வேண்டும் என இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பணிவோடு கேட்டுக்கொள்கிறது.
-M.சுரேஷ்குமார்.