இளைஞர் விருதுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு!!!

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது. ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம்ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ந் தேதி 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31ந்தேதி, 2024 (3103,2024) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும் அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் 01.05.2024 முதல் கடைசி நாள் 15.05.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இணையதளத்தில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல்துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவைகளை 17.05.2024 மாலை 4,00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என
மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp