தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஓட்டப்பிடாரம் அகிலாண்டேஸ்வரி அம்மாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 14ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் சார்பில் காலை 9 மணிக்கு மற்றும் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் ஊரின் வீதி வழியாக சப்பர வீதி உலா நடக்கிறது. 9.வது திருவிழாவான நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 9.30 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எறிந்தருள் நிகழ்ச்சி நடந்தது.
காலை 10 மணிக்கு மிதுன லக்னத்தில் தேரோட்டம் நடந்தது. இப்போது ஓட்டப்பிடாரம் சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து 12.10 மணிக்கு பழைய நிலையை அடைந்தது. 10.வது திருவிழாவான இன்று தீர்த்தவாரி திருவிழாவும், 11.வது திருவிழாவான நாளை சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்த விழாவில் ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முப்புடாதி என்ற திவ்யா, ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் அமமுக சிறுபான்மை மாவட்ட தலைவர் உலகையா உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.