தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மாடு சின்ன மாடு வண்டி எல்லகை பந்தயம் நடைபெற்றது.
இதில் பெரிய வண்டி போட்டியில் 10 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 22 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அயிரவன்பட்டி தொழில் அதிபர் முருகேச பாண்டியன் அவர்கள் மாட்டுவண்டி போட்டியை தொடங்கி துவக்கி வைத்தார்.
10மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் ராஜா,மாட்டு வண்டியும், 2-வது பரிசை சீவலப்பேரி ஸ்ரீ துர்காம்பிகா,மாட்டு வண்டியும், 3-வது பரிசை கே சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல் மாட்டு வண்டியும், 4 பரிசு மதுரை மாவட்டம் பிரேம் பிரதர்ஸ் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 6-மைல் தூரம் சின்ன மாட்டு வண்டி போட்டியில் ஸ்ரீ துர்க்காம்பிகை. மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது கே சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல், 3-வது மேலும் மீனாட்சிபுரம் முத்து ஈஸ்வரி, வண்டியும் 4-வது ராமநாதபுரம் மாவட்டம் கம்பத்து பெட்டி தினேஷ்குமார் மாட்டு வண்டியும் பிடித்தன.
திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம்,தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் காளைகள் மற்றும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டன பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது..
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.