ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜய்சீலன் நேற்று குறுக்குசாலையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சிலோன்காலனி, ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம் உட்பட பல கிராமங்களில் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஓசநூத்து கிராமத்தில் ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜய்சீலன் பேசியதாவது.
இந்திய தேசத்தை யார் ஆள வேண்டும் தீர்மானிக்கின்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல உங்களுக்கு தெரியும். ஸ்டாலினோ எடப்பாடியோ போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பத்து ஆண்டுகள் சிறப்பான முறையில் பணியாற்றி இந்திய தேசத்தை மிகப்பெரிய வளர்ச்சி நாளாக ஆக்கி காட்டினார். மூன்றாவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் மோடி போட்டியிடுகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நம்முடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்லுவோம். எதிர் அணியில் இருக்கும் இந்திய கூட்டணியே பாருங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது. நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார் ஐந்து ஆண்டுகளில் எத்தனை முறை உங்களாய் சந்தித்தார். அவர் சென்னையை சேர்ந்தவர் காலையில் விமானத்தில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வருவார் அமைச்சரோடு போட்டோக்கு போஸ் கொடுத்து மீண்டும் மாலையில் வீட்டுக்கு சென்று விடுவார் அதுவும் சென்னைக்கு.
இப்படிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களுக்கு என்ன தேவை கண்டு கொள்வதில்லை. மக்களின் குறைகளை பாராளுமன்றத்தில் பேசுவதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் மக்கள் குறைகளை பேசுவதை விட்டுவிட்டு சண்டைகளை போட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்துவிட்டு பெருமையாக சொல்லுவார் இதுதான் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் வேலை. நம்முடைய குறைகளை தீர்த்து வைக்க தான் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறோம். ஒரு நாள் கூட மக்களுக்காக குரல் கொடுத்ததே இல்லை. 5 வருடத்தில் மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்தது இல்லை. மோடியை பற்றி ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது.
காங்கிரஸ் பத்து ஆண்டுகள் ஆட்சியில் தி.மு.க சார்பில் ஐந்து மந்திரிகள் இரண்டு முறை இருந்திருக்கிறார்கள். அதில் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் ஒன்னே முக்கால் கோடி ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி, ராஜா ஆகிய இருவரும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தில் இளம் விதவைகள் உள்ள மாநிலமாக இருக்கிறது அதனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மார்க் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறிய கனிமொழி. ஆட்சிக்கு வந்த உடன் நான் கூறவில்லை என்ற சொன்ன ஊழல் ராணி தான் கனிமொழி.
அதிகப்படியான டாஸ்மார்க்கில் திறந்து போதை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதனால் யோசித்துப் பாருங்கள் இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி வாக்களித்து வந்தோம் எந்தவிதன் நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மோடி எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று கூறி வந்த தி.மு.க.வினர் ஜவுளி பூங்கா அமைத்துக் கொடுத்தார்களா? உங்கள் குறைகளை நிவர்த்தி செய்திட நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சைக்கிள் சின்னம் இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜய்சீலன் பேசினார்.
அப்போது பாரதி ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் லிங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி.வாரியார், மண்டல் தலைவர் பிரபாகர், மண்டல் பொதுச்செயலாளர் முருகபெருமாள், சமூக ஊடக மாவட்ட செயலாளர் ராம்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் உமரி சத்தியசீலன், கிஷோர் குமார், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் கோமதிராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் கருப்பசாமி, மேற்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.