சுந்தரலிங்கம் நினைவாக அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக என கவர்னர்கிரி பிரசாரத்தில் கடம்பூர் ராஜூ தகவல்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சிவகாமி வேலுமணி ஆதரித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசிய
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று மாலை குறுக்குச்சாலை கச்சேரி தளவாய்புரம் வெள்ளாறம் கவர்னர்கிரி பாஞ்சை இந்திரா நகர் பகுதியில், ஒட்டப்பிடாரம், ஒசநூத்து குலசேகரநல்லூர் முப்புலிவெட்டி புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி சாமி நத்தம் சில்லநத்தம் நயினார்புரம் பகுதிகளில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு ஆதரித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த மண்ணில் அவர்க்கு மணிமண்டபம் மற்றும் முழு குதிரையில் கம்பீரத் தோற்றத்துடன் போர்புரிவதை போல் முழு உருவ திருவுருவசிலை அமைக்க ரூ.45 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட முழவதும் பாதிக்கப்பட்டது ஆனால் திமுக அரசு 5 தாலுகாக்கு ரூ.6000 மற்ற 5 தாலுகா மக்களுக்கு ரூ1000 வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாதிக்கப்பட்டது தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும். ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தி பிடிபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர் ஜோராக போதை பொருள் கடத்தி வந்துள்ளார். அந்த போதை பொருளால் தமிழ்நாடே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

அதிமுக வேட்பாளர் தான் மண்ணின் மைந்தன். இவர் தான் உள்ளூர் வேட்பாளர். இவர் வெற்றி பெற்றால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் நிச்சயம் திறக்கப்பட்டு இயங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் பேசியதாவது, சிவகாமி வேலுமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எந்தவித சந்தேகமும் இல்லை. கனிமொழி பெரிய இடத்து இடம் நம்மால் பார்க்க இயலாது எந்தவித குறையும் சொல்ல முடியாது உங்களை சந்திக்கவும் மாட்டார்கள். நான் உங்க ஊர் வேட்பாளர் எப்போதும் என்னை சந்திக்கலாம். நான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அலுவலகம் அமைத்து உங்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் வர்த்தக அணி மாநில செயலாளர் வர்த்தக அணி செயலாளர் சி.தா.செல்லப்பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ மோகன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர், விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கோபி என்ற அழகிரி மாவட்டம் மீனவர் அணி செயலாளர் ஆலோசனைமரியான் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் SR சின்னத்துரை இளைஞர் அணி செயலாளர் தினேஷ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp