கோவை மாவட்டம் வால்பாறை கடந்த சனிக்கிழமை இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் தொழிலாளர் குடியிருப்பில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களின் உடைமைகளை மீட்பதிலும் பெரும் பொருட்சேதங்களை தவிர்த்து தீ வேறு இடங்களுக்கு பரவாமல் தடுத்து தங்கள் உயிரை பணயம் வைத்து போராடிய தமிழக வெற்றிக்கழகத்தின் ஆற்றல் மிகு வீரர்கள் ஹரி, நவாஸ்,முனியப்பன்,ருத்திரன்,அஜய்,நிவாஸ்,கண்ணன் உள்ளிட்டோரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இவர்கள் தீ அனைப்பு வாகனம் வருவதற்க்குள் தன்னுயிர் துச்சம் என நினைத்து தீவிரமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய கழக உடன்பிறப்புகளை வால்பாறை நகர தலைமையின் சார்பில் நகரத்தலைவர் ஆண்ட்ரூஸ் நகர செயலாளர் சையத் அலி வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டி கௌரவ படுத்தினர்.
இவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு கழக
உடன்பிறப்புகள் களப்பணி ஆற்றிட வேண்டும் என நகரத் தலைவரும் நகரச் செயலாளரும் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
–P.பரமசிவம், வால்பாறை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ