கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட் பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரே படிக்கட்டின் தாழ்வான பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர். அப்பகுதியில் நகராட்சிக்குட்பட்ட கடைகளில் மேற்கூரை அமைத்தல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் குப்பை கழிவுகளை அப்பகுதியில் கொட்டுவது அதிகளவு அதிகரித்து உள்ளது. மேலும் கல், ஜல்லி, மணல் போன்றவை அப்பகுதி குவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வியாபாரிகள் பழைய பொருட்கள் குவித்து வருகின்றனர் அப்பகுதியில் எலி இறந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் கூறிய பொழுது அவர்கள் கடைகளில் மேற்கூரை பணி நடைபெற்று வருகிறது. இதனால் பணி முடிந்தவுடன் பொருட்களை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று கூறினார். ஆனால் பணி முடிந்து பல நாட்களாகியும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வியாபாரிகளும் குப்பைகளை அதிக அளவு கொட்டி வருகின்றனர்.
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது போன்ற சமூக துரோகம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அப்பகுதியில் வரும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.